2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

DIMO புதிய காட்சியறைகள் திறப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

DIMO நாடெங்கிலுமுள்ள Tata Motors விற்பனை மையங்களின் தற்போதைய வலையமைப்பை மேலும் விஸ்தரித்துள்ளது. இலங்கையில் மூன்று பிரத்தியேகமான Tata பயணிகள் மோட்டார் கார் விற்பனை காட்சியறைகளை ஆரம்பிப்பதற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் முதலீடு செய்யும் முகமாகப் புதிய 3S வசதியுடன் (விற்பனை, பேணற்சேவை மற்றும் உதிரிப்பாகங்கள்) 30இற்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்ட வலையமைப்பாகப் பலப்படுத்தியுள்ளது.   

இதன் முதற்கட்டமாகத் தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த கொள்வனவு அனுபவத்தை வழங்கும் வகையில் அண்மையில் நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் காட்சியறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு காட்சியறையானது இல.258, சிலாபம் வீதி, பெரியமுல்லை என்ற முகவரியிலும், களுத்துறை காட்சியறையானது இல.768, காலி வீதி, கட்டுக்குருந்த என்ற முகவரியிலும் அமைந்துள்ளன.   

திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய, ரஞ்சித் பண்டிதகே, (பணிப்பாளர் சபைத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர், DIMO) கூறுகையில், “பயணிகள் மோட்டார் கார் வியாபாரத்தை உச்சத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளோம். பெறுமதிவாய்ந்த எமது வாடிக்கையாளர்கள் தற்போது விசாலமான மற்றும் நவீன வலையமைப்பின் மூலமாக பல நன்மைகளை அனுபவிக்கவுள்ளதுடன், இது தொடர்ந்தும் விஸ்தரிக்கப்பட்டு, மேம்படுத்தப்படவுள்ளது” என்றார்.   

நீர்கொழும்பு காட்சியறை திறப்பு விழா நிகழ்வில், உரையாற்றிய ஜொனி உம்மன் (தலைமை அதிகாரி, சர்வதேச வியாபாரப் பிரிவு, பயணிகள் வாகனங்கள், Tata Motors) கூறுகையில், “இலங்கையில் Tata Motors) நிறுவனத்தின் தொடர்ச்சியான விஸ்தரிப்பு மற்றும் இந்தத் திறப்பு விழா சுப நிகழ்வில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மிகவும் பூரிப்படைந்துள்ளோம். இலங்கையில் பயணிகள் வாகன சந்தையில் எமது விஸ்தரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் முதலாவது பாரிய முன்னெடுப்பாக இந்தத் திறப்பு விழா நிகழ்வு மாறியுள்ளது.”   

இந்த நவீன மற்றும் பிரத்தியேகக் காட்சியறைகள் சராசரியாக 1500 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட தாராளமான இட வசதிகளைக் கொண்டுள்ளதுடன், அங்கு 5 முதல் 6 வரையான வாகனங்களைக் காட்சிப்படுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .