2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

வெஸ்ட் ஹாம், செல்சி போட்டியில் இரசிகர்கள் இரகளை

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெஸ்ட் ஹாம் யுனைட்டெட், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில், இரசிகர்களின் இரகளையுடன் வெஸ்ட் ஹாம் கழக இலண்டன் அரங்கத்தில் இடம்பெற்ற, ஈ.எஃப்.எல் கிண்ண நான்காவது சுற்றுப் போட்டியில், செல்சியை வெஸ்ட் ஹாம் வென்றபோதும், பொலிஸாரினால் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் வென்ற இப்போட்டியின்போது, நூற்றுக்கணக்கான இரசிகர்கள் மோதி, கலமடக்கும் பொலிஸார் சனத்திரளினுள் நுழைந்த நிலையில், பிளாஸ்டிக் போத்தல்கள், இருக்கைகைகள், நாணயக் குற்றிகள் எறியப்பட்டிருந்தன.

இப்பருவ காலத்திலேயே, புதிய அரங்குக்கு வெஸ்ட் ஹாம் நகர்ந்த நிலையில், கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மிடில்ஸ்பேர்க் அணியுடனான போட்டியிலும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு, அற்ககோல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இந்தப் புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எந்தவொரு இரசிகருக்கும் வாழ்நாட் தடை விதிக்கவுள்ளதாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள், உயர் ரக கண்காணிப்புக் கமெரா அமைப்புகளிலிருந்தும் அனுமதிச் சீட்டு கொள்வனவு செய்யும் வரலாற்றிலிருந்தும் அடையாளங் காணப்படுவார்கள் என இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான வெஸ்ட் ஹாம் தெரிவித்துள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் ஹாம், தனது காலிறுதிப் போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டெட்டை, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

மன்செஸ்டர் யுனைட்டெட், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், தற்போதைய சம்பியன்களான, மன்செஸ்டர் சிற்றியைத் தோற்கடித்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக பெறப்பட்ட கோலினை, ஸல்டான் இப்ராஹிமோவிக்கிடமிருந்து பந்தைப் பெற்ற ஜுவான் மாத்தா பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .