2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புகை கக்கும் வாகனங்கள்: முறையிடுவதற்கு புதிய இலக்கம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்  

“வாகனங்களிலிருந்து வெளியேறும் அதிக புகை தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு, 011-2669915 என்ற தொலைபேசி இலக்கத்தை, இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. அத்துடன், 011-3054356 என்ற தொலைநகல் இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள், அதிக புகையுடன் செல்லும் வாகனங்கள் தொடர்பில், மேற்படி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு முறையிட முடியுமென, இலங்கை மோட்டார்  திணைக்களத்தின் விசேட வேலைத்திட்ட பணிப்பாளர் ஏ.டபிள்யூ.திசாநாயக்க தெரிவித்தார்.   

பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே, இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் கூறினார். வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மையான புகைகளைக் கட்டுப்படுத்தி, சூழலைப் பாதுகாத்து, பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலேயே, இத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.  

சூழலைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், வளி மாசுபடுதலைத் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று, நேற்று வியாழக்கிழமை, நுவரெலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “வளி மாசுபடுதலை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை, இலங்கை மோட்டார் திணைக்களம், நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது. இதன் முதலாவது வேலைத்திட்டத்தை நுவரெலியாவில் ஆரம்பித்துள்ளோம்” என்றார்.   

“இதற்கமைவாக, பல வேலைத்திட்டங்களை நுவரெலியாவில் முன்னெடுக்கின்றோம். அதிலொரு பகுதியே வாகனங்களை பரிசோதிக்கும் நடமாடும் சேவை. நுவரெலியா-பதுளை வீதியில் பயணித்த வாகனங்களை பரிசோதித்தப்போது, அதில் பல வாகனங்கள் கடுமையான புகைகளை வெளியேற்றியவாறே சேவையில் ஈடுபட்டன.   

இத்தகைய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலப் பகுதியில், அவர்கள் வாகனங்களை திருத்தி எம்மிடம் காண்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யத் தவறும் பட்சத்தில், வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .