2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

“நினைவுத் தூபியை அமைத்துத் தாருங்கள்'

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவினால் பலியான உறவுகளின் பெயர்கள் மற்றும் அவர்களது புகைப்படங்கள் அடங்கிய நினைவுத் தூபியொன்றை அமைத்துத் தருவதற்கு, அரசியல்வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் முன்வர வேண்டுமென, மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.  

“தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே எமக்கு புதிய வீடுகள், கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. இப்புதிய வீடுகளில் எம்முடன் குடியிருக்க, மண்சரிவில் பலியான 37 உறவுகள் இல்லாதது, வேதனையளிக்கின்றது.   

“மண்சரிவில் பலியான எமது உறவுகளுக்காகத் தீபாவளி தினத்தன்று படையலிட்டு வழிபடவுள்ளோம். புதிய வீடுகள் அமைத்துக்கொடுத்ததைப் போன்று, நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டிருந்தால் அதுவும் மகிழ்வுக்குரிய ஒன்றாக அமைந்திருக்கும்” எனவும் அவர்கள் கூறினர்.  

மீறியபெத்தை மண்சரிவு ஏற்பட்டு, நாளை சனிக்கிழமையுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றன. மீறியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட எழுபத்தைந்து குடும்பங்களுக்கும், கடந்த 22ஆம் திகதி,  சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள் வழங்கப்பட்டன.  

இந்நிலையில், நாளை சனிக்கிழமை காலை, மண்சரிவில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .