Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று நேற்று வியாழக்கிழமை மாலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்தும் இடமொன்றில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து வருகை தந்த நிதிக் குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் றி 2014. 2015 எனும் இலக்கமுடைய இன்ரகூலர் எனப்படும் ஜீப் வண்டியை கைப்பற்றிச் சென்;றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த வாகனம் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வாகன திருத்துமிடத்தில் திருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .