சிறுவர் கதைப் புத்தகம் வெளியீடு
28-10-2016 03:26 PM
Comments - 0       Views - 51

கே.எல்.ரி.யுதாஜித்

டாக்டர் ஓ.கே.குணநாதன் எழுதிய, 'உயிர் உறிஞ்சி' டெங்கு விழிப்புட்டல் சிறுவர் கதைப் புத்தக வெளியீடு, நாளை சனிக்கிழமை (29) காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மக்கள் வங்கி நடத்தும் சர்வதேச சிறுவர் தின விழாவிலேயே இக் கதைப் புத்தகம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

முகாமையாளர் எஸ்.சரவணபவன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் விழாவில், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு வலயக்ககல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பிராந்திய தொற்றுநோயாளர் பிரிவு வைத்திய கலாநிதி தர்சினி காந்தரூபன், உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வெளியீட்டுரையை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் து.கௌரீஸ்வரன் ஆற்றவுள்ளார்.

"சிறுவர் கதைப் புத்தகம் வெளியீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty