Shanmugan Murugavel / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்ககாவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் எவ்வாறு அணுகுவது தொடர்பாக நிலவும் வேறுபாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிநாட்டடமைச்சர்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (13), கலந்துரையாடிய நிலைமையில், குறித்த சிறப்புப் பேச்சுவார்த்தைகளை, பிரித்தானிய, பிரெஞ் அமைச்சர்கள் தவறவிட்டிருந்தனர்.
ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனை, குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் வென்றிருந்த நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைக்கான தலைவி பெடெரிக்கா மொகிரினி, பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில், இரவுணவுப் பேச்சுவார்த்தைகளுக்காக வெளிநாட்டமைச்சர்களை அழைத்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருங்கிய நாடாக கடந்த பத்தாண்டுகளாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் முடிவில், தேவையில்லாத சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கருதும் குறித்த பேச்சுக்களில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் கலந்து கொள்ளவில்லை. பிரெஞ் வெளிவிவகார அமைச்சர் ஜுவான் மார்க் அய்ரோல்ட், சில காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .