2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 14 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (13), இடம்பெற்ற போட்டிகளில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

போர்த்துக்கல், இலத்தீவியா அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-1 என கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது. போர்த்துக்கல் சார்பாக, அவ்வணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெனால்டியொன்றை தவறவிட்டபோதும் இரண்டு கோல்களைப் பெற்றதுடன், வில்லியம் கவால்ஹோ, ப்ரூனோ அல்விஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

நெதர்லாந்து, லக்ஸம்பேர்க் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. நெதர்லாந்து சார்பாக மெம்பிஸ் டிபே இரண்டு கோல்களையும் ஆர்ஜன் ரொபின் ஒரு கோலினையும் பெற்றனர்.

பெல்ஜியம், எஸ்தோனியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 8-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பாக, ட்ரைஸ் மேர்ட்டென்ஸ், ரொமேலு லுக்காக்கு ஆகியோர் தலா இரண்டு கோல்களையும் தோமஸ் மெயுனியர், ஈடின் ஹஸாட், யனிக் கராஸ்கோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். “ஒவ்ண் கோல்” முறையில் ஒரு கோல் கிடைக்கப் பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X