Menaka Mookandi / 2016 நவம்பர் 18 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே இன்று தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணியாகும் என,ஈ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வரலாற்றில் இடம்பெற்ற குறைகளை சரிசெய்து, தாய் நாட்டுக்காக புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு, நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இன்று ஒன்றுபட்டுள்ளன. எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், நாட்டினதும் மக்களினதும் வெற்றிக்காக அப்பயணத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று (18) முற்பகல், புளத்சிங்ஹல - மதுராவல பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பிரிவினையைப் பார்க்கிலும், ஒற்றுமை முக்கியமானதாகும் என்றும் இலங்கையின் வரலாற்று அடிப்படைகளையும் சிரேஷ்ட கலாசாரம் மற்றும் கீர்த்திமிக்க வரலாற்றுப் பாரம்பரியங்களையும் பேணி, அரசர்கள் காலத்திலிருந்த இலங்கையின் கீர்த்தியை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தி ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி, மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர, மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன், முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, மாகாண அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச ஆகியோரும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .