Kanagaraj / 2016 நவம்பர் 18 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளினால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தோல்வியைத் தழுவிக்கொண்டார் என்று சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, இனவாதத்தைத் தூண்டி, தன்னை பிரபலப்படுத்திக்கொண்டு அரசியலுக்கு வருவதற்கு முயற்சிகின்ற ஞானசார தேரரையும், அரசியலில் இருந்துகொண்டு இனவாதத்தை பேசிக்கொண்டிருக்கின்ற, வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனையும், வெறுப்புணர்வைத் தூண்டும் சட்டத்தின் கீழ் கைதுசெய்யுமாறும் கோரிநின்றார்.
வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போதும் கோரிநின்றேன். இப்போதும், கூறுகின்றேன். அச்சட்டத்தை அமுல்படுத்தி இனவாதத்தை தூண்டும் வகையில் பேசுவோரை கைதுசெய்யவும் என்றும் கோரிநின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .