Kanagaraj / 2016 நவம்பர் 18 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது. அத்திட்டத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஆதரவாக வாக்களித்தது.
காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், வாக்களிப்பில் கலந்துகொண்டு 'ஆம்' என்று கூறினார். இதன்போது, ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி ஆரவாரஞ்செய்தனர்.
இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தாவும் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதன்போதும் ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .