சம்பியனானது காத்தான்குடி சவுண்டஸ் வி.கழகம்
16-11-2016 07:03 PM
Comments - 0       Views - 26

- எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் நடாத்திய கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் நடாத்திய கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது.

10 கால்பந்தாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து காத்தான்குடி சண்றைஸ் விளையாட்டுக் கழகம் மோதியது.

இதில், போட்டியின் வழமையான நேரத்தில், இவ்விரண்டு கழகங்களும் கோலெதனையும் பெறாததால், சம்பியனாகும் அணியைத் தெரிவு செய்யும் பொருட்டு பெனால்டி வழங்கப்பட்டது. பெனால்டியில், 4-3 என்ற ரீதியில் காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் சி.எம்.எம்.சமீம் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில், சண்றைஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.றமீஸ், காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

"சம்பியனானது காத்தான்குடி சவுண்டஸ் வி.கழகம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty