விபத்து: ஒருவர் பலி; ஒருவர் கைது
21-11-2016 03:45 PM
Comments - 0       Views - 15

கொழும்பிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனமொன்று, வெல்லவாய பிரதேசத்தில் வைத்து, எதிரே பயணித்த தனியார் பஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், கெப் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில், 43 வயதுடைய சுகாத் கித்சிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

"விபத்து: ஒருவர் பலி; ஒருவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty