Gavitha / 2016 நவம்பர் 22 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்
வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து 59வயது ஆண், சடலமாக செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி, என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பில் சத்திரசிகிச்சை செய்துக்கொண்டுள்ளார். அதனையடுத்து, மீண்டும் ஜேர்மனுக்கு சென்றுவிட்டார்.
எனினும், அங்குள்ள காலநிலை ஒத்துக்கொள்ளாததால் நாடு திரும்பிய அவர், பத்தினியார் மகிழங்குளத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்ததுடன், வீட்டை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், நிர்மாணப் பணிகளுக்கு தேவையான மணல் ஏற்றி வந்த டிப்பர் சாரதி, வீட்டு உரிமையாளர், வாசலில் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த சம்பவ இடத்துக்கு வந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர், அண்மையிலேயே வவனியாவுக்கு வந்துச் சென்றதாக தெரிவித்த உறவினர்கள், 1985ஆம் ஆண்டுவரை இவர், இலங்கை பொலிஸில் பணியாற்றியிருந்ததாகவும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .