2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உண்மை நல்லிணக்க ஒன்றியத்தின் அறிமுக பிரசுர விநியோகம்

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான மக்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதையொட்டி, அதனை பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கான அறிமுக பிரசுர விநியோகம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக, நேற்றுத் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றது.

அத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்களின் வலைப்பின்னலாக எமது ஒன்றியம் செயற்பட்டு, பிராந்திய ரீதியில் உருவாகும் அரசியல் மற்றும் மத ரீதியான மோதல்கள் பற்றி அக்கறை செலுத்தும்.
எமது எதிர்ப்பார்ப்பு யாதெனில்,

1. நிலைமாறு கால நீதியை அமுல்படுத்துகையில் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் அதன் பலன் சமமாக கிடைக்க வேண்டும்.

2. நிலையான சமத்துவ சமாதான மற்றும்  சமூக நீதிக்கு ஆன்மீக பொறுமை கருணை உள்ளிட்ட உரிய பண்புகள் தேவை.
ஆகையால் எமது மக்கள் ஒன்றியம் கீழ்க்காணும் குறிக்கோளுக்காக செயற்படும்.

பிராந்திய பிரதிநிதிகளைக் கொண்ட சுயாதீன குழுவாக செயற்படும் நாம், அரசு மற்றும் அரசசார்பற்ற  செயற்பாட்டாளர்களால் நிலைமாறு கால நீதி தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் விளைவாக, மக்களின்பால் ஏற்படும் தாக்கம் பற்றி கண்காணிப்பதுடன் அதுபற்றி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதிலும் அழுத்தத்தைப் பிரயோகிப்பதிலும் ஈடுபடுவோம்.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில், அரச மற்றும் அரசசார்பற்ற செயற்பாட்டாளர்களது பொறுப்பினை  பலப்படுத்தல் மற்றும்  விழிப்புணர்வூட்டுவதற்காக அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, இவ்வொன்றியம் செயலூக்கம் மிக்க பங்களிப்பை வழங்கும்

பின்வரும் மூலோபாய நடவடிக்கைகளை இவ்வொன்றியம் மேற்கொள்ளும்

நிலைமாறு கால செயல் நெறியை கண்காணித்தல்

அறிக்கைகள், சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றம் திணைக்களங்களின் கொள்கை தொடர்பான அறிக்கைகளை அவதானித்தல்.

அமைச்சுக்கள்: தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பு (ONUR) நல்லிணக்க பொறிமுறைக்கான செயலகம் (SCRM) என்பவற்றின் செயற்பாடுகள் பிராந்திய மற்றும் உள்ளூர் பகுதிகளில் எவ்வாறு செயற்படுகின்றன என்பதனை அவதானித்தல்.

தேசிய ரீதியாக கொள்கை நடவடிக்கைகளை அவதானித்தல்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கள், ஊடகம், வன்முறை  என்பவற்றை கண்காணித்தல் மற்றும் தீங்கு இழைக்காத சுட்டிகளை பட்டியலிடல்.

உள்ளக ரீதியில் கிடைக்கும் பின்னூட்டல்களை தேசிய ரீதியில் உள்ள அதிகார சபைகள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவூட்டல் செய்தல்

உள்ளுராட்சி மன்றங்களுடனும் தேசிய ரீதியில் ONUR மற்றும் SCRM என்பனவற்றுடன் முறையாக பிராந்திய மற்றும் தேசிய கலந்துரையாடல்களை நடாத்துதல்.

ஊடகங்களுக்கு, சமூக ஊடகங்களுக்கு, முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி அறியத்தருதல் போன்ற விடயங்கள், பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X