வரலாற்றில் இன்று: நவம்பர் 23
23-11-2016 12:00 AM
Comments - 0       Views - 93

1574: ஜுவான் பெர்ணான்டஸ் தீவுகள் சிலி நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டன.
 
1919: அமெரிக்காவின் தொழிலாளர் மாநாட்டு குழு, நாளொன்றுக்கு 8 மணிநேரமும் வாரத்திற்கு 48 மணிநேர வேலையையும் வலியுறுத்தியது.

1926: சத்ய சாயி பாபா பிறந்தார்.

1950: அமெரிக்காவின் நியூயோர்க் றிச்மன்ட் மலைத்தொடரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 79 பேர் பலி.

1963: அமெரிக்காவில் ஜோன் எவ்.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து லிண்டன் ஜோன்ஸன் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1972: சீனாவுக்கான பயணத்தடையை 22 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்கா நீக்கியது.

1980: இத்தாலியில் தொடர் பூகம்பங்களால் 4800 பேர் பலி.

1996: எத்தியோப்பியாவிலிருந்து இரு நபர்களால் 175 பயணிகளுடன் கடத்தப்பட்ட விமானம் இந்துசமுத்திரத்தில் வீழ்ந்ததால் 100 பேர் பலி.

2002: நைஜீரியாவில் அழகுராணி போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதால் இப்போட்டி பிரிட்டனுக்கு மாற்றப்பட்டது.

2006:; ஈராக்கின் சாடார்சிற்றியில் குண்டுத்தாக்குதல்களால் 215 பேர் பலியாகினர்.

"வரலாற்றில் இன்று: நவம்பர் 23" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty