Princiya Dixci / 2016 நவம்பர் 24 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடப் புத்தகங்களில், இலங்கையை ஆட்சி செய்த தமிழ் அரசர்கள் பற்றிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளதாக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,
“பாடசாலை பாடப் புத்தகங்களில், இலங்கையில் ஆட்சி செய்த மன்னர்கள் சம்பந்தமான வரலாறு, திரிபுப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று பாடப்புத்தகத்தில் துட்டகைமுனு மன்னன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், எல்லாளன் பற்றி குறிப்பிடப்படவில்லை.
தமிழ் பாடப் புத்தகங்களில், தமிழ் மன்னர் பற்றி சரியான தகவல்கள் காணப்படவில்லை. தமிழ் மன்னர்கள் பற்றி, பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும். எல்லாளன் மன்னனின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும்” என, வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .