சொகுசு வீட்டில் கசிப்பு நிலையம்: இருவர் கைது
28-11-2016 11:32 AM
Comments - 0       Views - 93

எம்.இஸட்.ஷாஜஹான்

கட்டானைப் பிரதேசத்தில் இரு மாடிகளைக்கொண்ட சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த கசிப்பு நிலையத்தை, நீர்கொழும்புப் பொலிஸார் சுற்றி வளைத்ததுடன், பெண்ணொருவர் உட்பட சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதோடு, பெருந்தொகையான மதுபானத்தையும் உபகரணங்களையும் ஞாயிற்றுக்கிழமை (27) கைப்பற்றியுள்ளனர்.

கட்டானை, கொந்தகே சந்தி, லுர்து மாவத்தையில் இந்தச் கசிப்புத் தயாரிப்பு நிலையம் இயங்கி வந்துள்ளது.

பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, கசிப்புத் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்துள்ளதுடன், 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கோடா, மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும், சொகுசு வீடுகள் மூன்றினை அதிகத்தொகையான வாடகைக்குப் பெற்று, அதில் ஒரு வீட்டில் மதுபானத் தயாரிப்பு நிலையத்தை நடத்தி வந்துள்ளதாகப் பொஸிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீடுகள், இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்குச் சொந்தமானது என, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"சொகுசு வீட்டில் கசிப்பு நிலையம்: இருவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty