2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'ஹீரோ நீரோ'

George   / 2016 நவம்பர் 28 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

சிறுவர்களுக்காக உருவாக்கப்படும் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றில் சோகம், வறுமை, கசப்பு உள்ளிட்ட  விடயங்களையே காண முடிகின்றது. சிறுவர்களின் உலகம் இருள்மயமாக சித்திரித்தே அதிகத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது இலங்கையில் மட்டுமல்ல பொதுவாக, தென்னிந்திய திரைப்படங்கள், ஹொலிவூட், பொலிவூட் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இந்தப் பொதுத் தன்மையை காணமுடியும்.

பாசம் ஊடாக வாழ்க்கைய அனுபவிக்க, அதன் ஊடாக வாழ்க்கையில் நுழையும் சிறுவர்கள் தொடர்பில் பேசும் வகையில், இலங்கை கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் “ஹீரோ நீரோ”.
சிறுவர்களின் மனதில் ஏற்படும் எண்ணங்கள் தொடர்பில், அவர்களது உலகத்தை அவர்களுக்கு உரிய வகையில் காணும் விதத்தில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை பிரதீப் மஹேஷ் லியனகே இயக்கியுள்ளார்.

“ஒருநாள், சிறுவனைப் போன்ற எண்ணத்தில்  இருந்தபோது ஏற்பட்ட சிந்தனையின் விளைவாக இந்தத் திரைக்கதையை எழுத ஆரம்பித்தேன்” என இயக்குநர் மஹேஷ் தெரிவிக்கின்றார்.

சிறுவர்கள் என்பவர்கள், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியவர்கள், வாழ்க்கை பிரச்சினைகளை தலையில் போட்டுக்கொண்டு, அதற்குத் தீர்வுக் காண அலையும் நபர்கள் அல்ல. வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு, எமது சிறுவர்களும் பார்வையிடக் கிடைக்கும் காட்டூன் திரைப்படங்கள், சிறுவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை மாத்திரம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன் ஊடாக சிறுவர்களின் மனது அழகானதாக மாறும். ஏழை, பணக்கார சிறுவர்கள் என்றாலும் வேறுபாடு இல்லை.

அடுக்குமாடி குடியிருப்பில்  வசிக்கும் 11  சிறுவர்களை சுற்றி இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர்களுக்கு  நிறைய அன்பு பாசம் கிடைத்தாலும் அதில் ஒரு சிறுவனுக்கு மாத்திரம் பாசம் கிடைக்கவில்லை. அந்த சிறுவனிடம் நாய் ஒன்று உள்ளது. அதனை அந்தச் சிறுவன் தனது சகோதரனைப் போல நடத்துகின்றான். இவர்களைச் சுற்றி சுவாரஸ்யமான, நகைச்சுவையுடன் இந்தத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கீதா வீரரத்ன, மஹிந்த பத்திரகே, துளீகா மாரபன, நில்மினி தென்னக்கோன், நிரோஷன் விஜயசிங்க, பிரேமதாஸ விதானச்சி மற்றும் ஒட்டாரா குணவர்தன ஆகியோர் நடித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .