Princiya Dixci / 2016 நவம்பர் 30 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
கடந்த 16ஆம் திகதி, கல்லுண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) அடையாளம் காட்டியதையடுத்து சடலம்,
இன்று புதன்கிழமை (30), யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உருத்திராபதி மயூரதனால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
தாமரைக்குளத்தடி துன்னாலை பகுதியினைச் சேர்ந்த உயிரிழந்த நடராஜா சந்திரதாசன் துன்னாலை பகுதியில் கடை ஒன்றினை நடத்தி வருவதாகவும், கடந்த 15ஆம் திகதி காலை தனக்கும் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையினை அடுத்து அவர் வீட்டை விட்டுச் சென்றதாக அவருடைய மனைவி தெரிவித்தார்.
அதன் பின்னர் தமிழ்மிரர் இணையத்தளத்தில் அவருடைய புகைப்படத்துடனான செய்தியினைப் பார்த்த பின்னர் தனது கணவர் வாள்வெட்டுக்கு இலக்கானதாக அறிந்து கொண்டதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .