George / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பொலிவூட் நடிகர் சல்மான்கான் தொடர்பில் நடிகை எமி ஜக்சன் மனந்திறந்துள்ளார்.
“ரஜினிகாந்துடன் 2.0 திரைப்படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். அந்த திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சியை மும்பையில் நடத்தி முடித்தனர். அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால், நானும் ரஜினிகாந்தும் ‘2.0’ படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம்.
அப்போது அவரிடம் ‘2.0’ படவிழாவில் கலந்து கொள்ளப்போவதை நினைத்து நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘எமி நான் நிஜமாகவே அந்த விழாவை நினைத்து மிகவும் பதற்றமாக இருக்கிறேன். ஊடகங்கள் கவனிக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளும்போதெல்லாம் இந்த பதற்றம் எனக்கு வந்து விடுகிறது.’ என்றார். நான் அவரிடம், நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். எனவே அப்படி பதற்றப்படக்கூடாது என்றேன்.
அதற்கு அவர் அது உண்மைதான். ஆனாலும், எனக்கு பதற்றம் வருகிறது என்றார். இதன்மூலம் ரஜினிகாந்த் எந்த அளவுக்கு பணிவான மனிதர் என்பதை அறிய முடியும். எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக பழகுவார். அவருடைய பணிவான நடவடிக்கைகளை பார்த்து நான் வியந்து போகிறேன்.
சல்மான்கானை எல்லோருக்குமே பிடிக்கும். நான் யாரையும் காதலிக்கவில்லை. ஹிந்தியில் கட்டுக்கோப்பாக உடலை வைத்துள்ள நடிகர் யார் என்று கேட்டால் அக்ஷய்குமார் என்பேன். அவர் உடலை நன்றாக வைத்துக்கொள்ள கடும் உடற்பயிற்சிகள் செய்கிறார்.” என எமிஜக்சன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .