Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வான டயலொக் கிரிக்கெட் விருதுகளில், 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் வென்றார். அதேபோல், டெஸ்ட் சகலதுறை வீரர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சகலதுறை வீரர் ஆகியவற்றையும் அவர் வெற்றிகொண்டார்.
மக்கள் தெரிவு விருதை, ஓய்வுபெற்ற திலகரட்ண டில்ஷானும் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர் விருதை ஓய்வுபெற்ற குமார் சங்கக்காரவும் வெற்றிகொண்டனர்.
விருது விவரம்:
2015இன் சிறந்த கிரிக்கெட் வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்
மக்கள் தெரிவு வீரர்: திலகரட்ண டில்ஷான்
எதிர்கால கிரிக்கெட் வீரர்: குசல் மென்டிஸ்
சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்: டினேஷ் சந்திமால்
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்: ரங்கன ஹேரத்
சிறந்த டெஸ்ட் சகலதுறை வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்
சிறந்த ஒ.நா.ச போட்டி துடுப்பாட்ட வீரர்: குமார் சங்கக்கார
சிறந்த ஒ.நா.ச போட்டி பந்துவீச்சாளர்: லசித் மாலிங்க
சிறந்த. ஒ.நா.ச போட்டி சகலதுறை வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்
இ-20 சர்வதேசப் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்: திலகரட்ண டில்ஷான்
இ-20 சர்வதேசப் போட்டிகளின் பந்துவீச்சாளர்: லசித் மாலிங்க
பெண்கள் ஒ.நா.ச.போட்டி சிறந்த துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து
பெண்கள் ஒ.நா.ச.போட்டி சிறந்த பந்துவீச்சாளர்: இனோகா ரணவீர
பெண்கள் ஒ.நா.ச.போட்டி சகலதுறை வீரர்: ஷஷிகலா சிரிவர்தன
சர்வதேச நேர்முக வர்ணனையாளர்: ரசல் ஆர்னல்ட்
சர்வதேச ஊடகவியலாளர்: றெக்ஸ் கிளெமென்டைன்
சர்வதேச நடுவர்: றுச்சிர பல்லியகுருகே
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .