2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘யாழில் அதிக குடிமன்னர்கள்’

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது அருந்துவோரின் எண்ணிக்கை, யாழ்ப்பாணத்தில் 400 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், தற்போதைய புள்ளிவிவரங்களின் படி, யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் மதுபான நுகர்வு, 5.7 லீற்றராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜே.வி.பி எம்.பி.யான பிமல் ரத்னாயக்க கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “2009.05.19ஆம் திகதியில், யாழ்.மாவட்டத்தில் 49 மதுபான விற்பனை நிலையங்கள் இருந்தன.

2010ஆம் ஆண்டில் 3 மதுபான நிலையங்களும், 2012ஆம் ஆண்டில் இரண்டும், 2013ஆம் ஆண்டில் நான்கும், 2015ஆம் ஆண்டில் ஒரு மதுபான நிலையமும் என, புதிதாக மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .