Kogilavani / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
“தனக்கென குடும்பம் ஒன்றை அமைத்துக் கொள்ளாது செல்வியாக வாழ்ந்து 8 கோடி மக்களும் அம்மாவாக போற்றப்பட்ட தமிழ் நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் இழப்பு பேரிழப்பாகும்" என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்..
அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“எந்த நாட்டிலும் எந்த மக்களுக்கும் அதிகமாக, தமிழ் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கடும் துயரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அந்த உன்னத அம்மாவின் குரல் அடங்கிவிட்டது.
திரைப்பட நடிகையாக கலை உலகில் அனைவரும் விரும்பத்தக்க ஒரு நடிகையாக இருந்து, ஒரு நாட்டை ஆட்சிசெய்யும் அளவுக்கு திறமைமிக்க தலைவியாக வாழ்ந்து காட்டிய செல்வி ஜெயலலிதா ஜெயராம், இலங்கைத் தமிழ் மக்களுக்காகவும் குரல்கொடுத்து வந்தவர்.
இன்று அவ்வாறான ஒருவரை தமிழ் நாட்டு மக்களும் தமிழ் நாட்டோடு ஒட்டிப்பிறந்த இலங்கை மக்களும் இழந்து ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்னனர். இவரின் இழப்பு தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .