Princiya Dixci / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு, கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று நாம் போராடியபோது, தமிழ் மக்கள் அழிவதை விரும்பி யுத்தம் எனும் தீயிக்கு இந்த ஒட்டுண்ணிக்குழுவின் தலைவர் கஜேந்திரன்குமார, எரிபொருளை ஊற்றியவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்களுக்கு ஈ.பி.டிபியும், அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியிருக்கின்றார் இது அரசியல் காழ்ப்புணர்வோடு ஆதாரமற்ற ஒரு பொய்யாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் அரசியல் வரலாறெங்கும் கஜேந்திரன்குமாரும் அவரது குடும்பமும், அவரது கட்சி உறுப்பினர்களும் தமிழ் மக்களின் இரத்தத்தை உரிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணி அரசியலையே செய்திருக்கின்றார்கள்.
மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையை மறுக்கும் சட்டவாக்கத்துக்கு இவரது பாட்டன் பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்து துரோகம் செய்ததையும், அவரது தகப்பன் குமார் பொன்னம்பலம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இரட்டை முகவராக செயற்பட்டு துரோகம் செய்ததை தெரிந்து கொண்ட புலிகள் அவரை சுட்டுக் கொண்டதையும் இவர் மறந்துவிட்டார்.
இவரது கட்சியைச் சேர்ந்த குதிரைக் கஜேந்திரன் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் ஒழிந்து கொண்டு பொங்கு தமிழ் நடத்துவதாகக் கூறி தமிழ் மக்களை வீதிக்கு இழுத்ததையும், பல்வேறு கொலைகளுக்கு காரணமானவர்களுடன் செயற்பட்டதையும், 40 ஆயிரம் சவப்பெட்டிகளை வடக்குக்கு அனுப்புங்கள் என்று நாடாளுமன்றத்தில் கூறி தமிழ் மக்கள் மீது யுத்தத்தை திணித்ததையும் இந்த ஒட்டுண்ணிக் குழுத் தலைவர் கஜேந்திரன்குமார் வசதியாக மறந்துவிட்டார்.
1997 ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கொலைகளை விசாரித்தால் கஜேந்திரன்குமாரின் நெருங்கிய சகாவான குதிரைக் கஜேந்திரனும் குற்றவாளியாக அடையாளம் காணப்படலாம் என்ற அச்சமும் கஜேந்திரன்குமாரை அச்சத்துக்குள் தள்ளிவிட்டிருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
கஜேந்திரன் குண்டர் குழுவையும், வாள் வெட்டுக்குழுவையும் நடத்தி வருகின்றாரா? என்ற சந்தேகங்கள் தமிழ் மக்களிடையே எழுந்துள்ள நிலையிலேயே இப்போது ஈ.பி.டி.பியை ஒட்டுக்குழு என்று பழைய பல்லவியைப் பாடியிருக்கின்றார் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .