2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நைன்வெல்ஸ் கருக்கட்டல் நிலையத்தினூடாக தம்பதிகளுக்கு வரப்பிரசாதம்

Gavitha   / 2016 டிசெம்பர் 06 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருமளவான நவீன வசதிகளுடன், நைன்வெல்ஸ் கருக்கட்டல் நிலையம் சிறந்த சேவைகள் மற்றும் பெறுபேறுகள் அடிப்படையான சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருக்கட்டல் நிலையங்களுக்கு நிகரான வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  

சர்வதேச நியமங்கள், நிபுணத்துவம் மற்றும் விதிமுறைகளுக்கமைய நிறுவப்பட்டுள்ள நைன்வெல்ஸ் கருக்கட்டல் நிலையம், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவற்றில் காணப்படும் கருக்கட்டல் நிலையங்களின் கண்காணிப்பு நியமங்களுக்கமைய செயற்படுகிறது. நைன்வெல்ஸ் பழையக் கட்டடப்பகுதியில் அமைந்துள்ள இந்நிலையம், வாடிக்கையாளர்களுக்கு அவசியமான இரகசியத்தன்மை மற்றும் பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றை வழங்குகிறது. ஓய்வான மனநிம்மதியளிக்கும் சூழலை வழங்குவதுடன், புதிதான புனருத்தாரணம் செய்யப்பட்ட மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட வரவேற்புப்பகுதி மற்றும் காத்திருக்கும் பகுதி ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களின் மனநிலைக்கு வலிமை சேர்த்துள்ளது.  

இந்தக் கருக்கட்ட நிலையம் அதிகளவு இடவசதிகளைக் கொண்ட ஆலோசனை அறைகள், உயர் தரமான ஸ்கானிங் வசதிகள் மற்றும் இதர குருதிப்பரிசோதனைகள், நோய்எதிர்ப்பு வக்சீன்கள் மற்றும் பொதுவான மருத்துவசிகிச்சைகள் போன்ற வசதிகளை வழங்குகிறது. ஒரே மாடியில் பல்வேறு வகையான வசதிகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதனூடாக, சிகிச்சைக்காக வருவோருக்கு பெருமளவு சௌகரியம் சேர்க்கப்படுகிறது. அவர்களின் நேரத்தையும் சேமித்துக்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.

இந்நிலையத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகளில், IUI (Intra Uterine Insemination) பரிசோதனை மாற்றங்கள் மற்றும் மேலும் பல சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சகல வசதிகளையும் இந்நிலையம் கொண்டுள்ளது. இந்த சிகிச்சைப்பிரிவில் Andrology ஆய்வுகூடம் மற்றும் IVF ஆய்வுகூடம் ஆகியன காணப்படுவதுடன், இந்த இரு ஆய்வுகூடங்களும் சத்திர சிகிச்சை கூடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் IVF சிகிச்சைகளை வினைத்திறன் வாய்ந்த வகையில் கருக்களின் தரத்துக்கு ஆகக்குறைந்த தாக்கத்துடன் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.  

IVF ஆய்வுகூடத்தின் தரம் என்பது, புதிய சாதனங்களுடன் மெருகேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், நியமப்படுத்தப்பட்டுள்ளது ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சிரேஷ்ட கருக்கட்டல் நிபுணரின் உயர் அனுமதியையும் பெற்றுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .