2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட சீர்திருத்தம்: ' பிரச்சினைகளை முன்மொழிவது சமூகத்துக்குப் பயனளிக்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட சீர்திருத்தம் தொடர்பாக யூகங்களின் அடிப்படையில் பிரச்சினைகளை முன்மொழிவதும் தரவுகளைக் காண எத்தனிப்பதும் சமூகத்துக்குப் பயனளிக்காது என்று நம்புவதாக காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் பணிப்பாளர் ஜனாபா அனீஸா பிர்தௌஸ் தெரிவித்தார்.

மேற்படி ஒன்றியத்தின் காத்தான்குடியிலுள்ள அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு தரப்பினர்களையும் நாம் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றோம். ஏற்கெனவே நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டக் குறைபாட்டால் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு, சட்ட சீர்திருத்தத்துக்கான முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில்; மிகக்;கவனமாக உள்ளோம்.

அதேவேளை, பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஷரீஆவுக்குட்பட்ட வகையில் மேற்படி முன்மொழிவுகள் அமைவதற்காக அது தொடர்பில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களைச் சந்திக்கும்போது, தற்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தரவுகளுடன் அறிக்கைப்படுத்தி எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
யூகங்களின் அடிப்படையில் பிரச்சினைகளை முன்மொழிவதும் தரவுகளைக் காண எத்தனிப்பதும் சமூகத்துக்குப் பயனளிக்காது என்று நம்புவதுடன், விஞ்ஞானபூர்வமான ஆய்வின் மூலம் அதனை அறிக்கைப்படுத்த முடியும் என்று கருதுகின்றோம். அதற்கான தரவுகள் மிகச் சரியானதாகவும் உண்மையானதாகவும் இருக்கவேண்டும். அவ்வாறாயின், அது உரிய நபர்களிடமிருந்து பெறப்பட வேண்டும். ஏறக்குறைய 5,000 பெண்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன' என்றார்.  

'மேலும், பல்வேறு தரப்பினர்களுடனான சந்திப்பின்போதும்,  சமூக மட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எவரிடமும் முறையான ஆய்வு அடிப்படையிலான தரவுகள் இல்லை என்று அறியக்கிடைத்தது.  
இந்த ஆய்வைக் காத்தான்குடியில் மேற்கொள்வது பொருத்தம் என கருதினேன். ஆய்வு தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன்,   ஆய்வு தொடர்பான சந்தேகத்தை சிலர் தொலைபேசி மூலம் கேட்டனர். அவர்களுக்கு விளக்கமளிப்பதற்கான நேரத்தை எமது காரியாலயத்தில் ஒதுக்கியிருந்தோம். ஆனால், எவரும் சமுகமளிக்கவில்லை.
எமது செயற்பாடுகள் தொடர்பில் காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடன் கலந்துரையாடுவது வழக்கமாகும். இது தொடர்பான முதலாவது அமர்வு சம்மேளனத்துடனும் அதன் பின்னர் பொதுமக்களுக்கான அமர்வில் இந்த ஆய்வின் முடிவு வெயிடப்படும்;.  

எமது நோக்கமானது முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் செயற்படும் உயர்மட்டக் குழுக்களிடம் இந்த ஆய்வைச் சமர்ப்பிப்பதாகும். மேலும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, சட்டத்தரணி சலீம் மர்சூக், சட்ட சீர்திருத்தக்குழு ஆகிய தரப்பினரிடமும் இதனைச் சமர்ப்பிக்கவுள்ளோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .