கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
10-12-2016 03:07 PM
Comments - 0       Views - 16

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஹேன பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைத்த கொச்சிக்கடை பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதோடு, கசிப்பு மற்றும் கசிப்புத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கொச்சிக்கடை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.மவ்சூனுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, வெலிஹேன விளையாட்டு மைதானம் முன்பாகவுள்ள காட்டுப் பகுதியில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த கசிப்பு தயாரிப்பு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது.

41250 மில்லி லீட்டர் கசிப்பு, 2250 லீட்டர் கோடா, கேஸ் அடுப்பு, கேஸ் சிலின்டர், கசிப்புத் தயாரிக்கப் பயன்படுத்தும் உபகரணம் மற்றும்கலன்கள என்பவற்றைச் சுற்றிவளைப்பின்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை, கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

"கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty