தேர்தலில் யானையில் ஏறமாட்டோம்: நிமல்
10-12-2016 03:49 PM
Comments - 0       Views - 189

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து இருப்போம். தேர்தல் வந்தால், எங்களுடைய பலத்தை காண்பிப்பதற்காக,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 'கை' சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என்று,  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற, வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிறக்காத குழந்தைக்கு பெயர் வைக்கமுடியாது. அவ்வாறுதான் கொஞ்சம் பொறுத்திருங்கள், வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   

 

"தேர்தலில் யானையில் ஏறமாட்டோம்: நிமல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty