நிறைவேறியது பாதீடு
10-12-2016 06:36 PM
Comments - 0       Views - 179

2017ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேறியுள்ளது. பாதீட்டுக்கு ஆதரவாக 165 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அந்தவகையில், 110 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேறியது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய சிறுபான்மைக் கட்சிகள், பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான மேற்படி வாக்கெடுப்புக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீபால கம்லத், பிரேமலால் ஜயசேகர, உள்ளிட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.

 

"நிறைவேறியது பாதீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty