ஆசிரிய இடமாற்றத்தில் பல்தரப்பினருக்கு அதிருப்தி
11-12-2016 04:34 PM
Comments - 0       Views - 14

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு  கல்வி வலயத் தமிழ் மொழிப் பாடசாலைகளின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த  ஆசிரிய இடமாற்றம் தொடர்பாக, பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு  கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் தொடர்ச்சியாக பத்து வருட காலத்துக்கு மேலாக சேவையாற்றிய ஆசிரியர்கள் பெரும்பாலானவர்களுக்கு இடமாற்றம் வழங்காமை தொடர்பாகவே அதிருப்தி வெளியிடப்பட்டள்ளது.

 ஒரே பாடசாலையில் பத்து வருட காலத்துக்கு மேலாகப் பணியாற்றி, எதிர்வரும் 2017ஆம் அண்ட ஜனவரி மாதம் 2ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களின் பெயர் பட்டில், நீர்கொழும்பு  வலய கல்விக் காரியாலயத்தினால், அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த வாரம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் உரிய முறையில் இடம்பெறவில்லை என்றும் அதிபர்களின் வேண்டுகோள்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை என்றும், ஒரே பாடசாலையில் பத்து வருடங்கள் முதல் 25 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் ஒரு சிலரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

"ஆசிரிய இடமாற்றத்தில் பல்தரப்பினருக்கு அதிருப்தி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty