Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமான சிவலிங்கம் இனந்தெரியாதோரால் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன், திரைச்சீலையும்; கிழித்து எறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அக்கோவிலிலிருந்த ஏனைய பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
வழமை போன்று சனிக்கிழமை (17) இரவு கோவிலில் பூஜையை முடித்துவிட்டு, இன்று (18) அதிகாலை பூஜை வழிபாட்டுக்காக கோவிலுக்குச் சென்ற பூசகர், இச்சம்பவத்தை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் கோவில் நிர்வாகத்தினருக்கு அவர் தகவல் வழங்கியதை அடுத்து, வாழைச்சேனைப் பொலிஸில் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .