Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோவியத் கால இராணுவத் தளமொன்றுக்கு அருகில் அவசர தரையிறங்கலை மேற்கொள்ள முயன்றபோது, தமது விமானங்களிலொன்று 39 பேருடன் வடகிழக்கு சைபீரியாவில் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய பாதுகாப்பமைச்சு இன்று (19) தெரிவித்துள்ளது.
இந்த இந்த விபத்தில் ஒருவரும் கொல்லப்படவில்லையென ரஷ்ய செய்தி முகவரகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், 32 பேர் ஹெலிகொப்டர் மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இதில் 16 ரஷ்யப் படையினர் பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சாகா குடியரசில் அமைந்துள்ள டிக்சி நகரத்துக்கு அருகிலுள்ள விமானத் தளமொன்றிலிருந்து ஏறத்தாழ 30 கிலோமீற்றர் தூரத்தில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.45க்கே ஐ.எல் விமானம் வீழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
வேகமான காற்றின் காரணமாக, அவசர தரையிறக்கத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கலாம் என, பிராந்திய அரசாங்கத்தின் பிரதித் தலைவரான அலெக்ஸெய் கொலோடெஸ்னிக்கோவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு சைபீரியாவிலிலுள்ள கன்ஸ்க் விமானத் தளத்திலிருந்து, ஏழு விமானச் சிப்பந்திகள் உள்ளடங்கலாக 39 பேருடன் புறப்பட்ட குறித்த விமானமானது, 1950களின் வடிவமைப்பைக் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .