Kogilavani / 2017 ஜனவரி 01 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், எஸ்.சதிஸ்
ஹட்டன் டிக்கோயாவுக்கு உட்பட்ட மூன்று ஆலயங்களில், பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹட்டன் டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேற்பிரிவு மருதவீரன் ஆலயம், வனராஜா விநாயகர் ஆலயம் என்பவற்றிலே, இக்கொள்ளைச் சம்பவங்கள், நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தாலிக்கொடி, 4 இலட்சம் ரூபாய் பணம், பிள்ளையாருக்கு சாத்தப்பட்டிருந்த வெள்ளி ஆபரணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதவீரன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவின் உதவியுடன், கொள்ளையில் ஈடுபட்ட நபரை அடையாளங்கண்டுள்ள பொலிஸார், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர், பல திருட்டுக்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் இவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவரென்றும் ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி நபர், திருடும்போது அலைபேசியில் உரையாடிக்கொண்டே திருடும் காட்சிகள் சீசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதால், இத்திருட்டுடன் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .