மக்களின் கருத்துக்களை பெற கால எல்லை நீடிப்பு
06-01-2017 03:31 PM
Comments - 0       Views - 8

ஊடகச்சுதந்திரம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கால எல்லை ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பூரண ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொதுமக்களின் கருத்துக்களும், யோசனைகளும் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பான கருத்துக்களையும், யோசனைகளையும் தபால் மூலம் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இலக்கம் 163, பொல்ஹேன்கொட, நாரஹன்பிட்டிய என்னும் முகவரிக்கும், 0112 514 853 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் ranga@dgi.gov.lk   என்ற மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"மக்களின் கருத்துக்களை பெற கால எல்லை நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty