யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம்?
06-01-2017 04:24 PM
Comments - 0       Views - 112

-எஸ்.ஜெகநாதன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டு, அது இறுதி நேரத்தில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம்?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty