விபத்தில் உயிரிழந்த மாணவி மாவட்டத்தில் முதலாமிடம்
07-01-2017 11:24 AM
Comments - 0       Views - 433

-க. அகரன்

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின்  பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் சோகமான செய்தியொன்றும் வெளியாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணித பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாணவி, அண்மையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா, கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், அண்மையில் உயிரிழந்திருந்தார்.

இவர்,  கணித பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"விபத்தில் உயிரிழந்த மாணவி மாவட்டத்தில் முதலாமிடம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty