இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முதலாமிடம்
07-01-2017 12:42 PM
Comments - 0       Views - 76

-க. அகரன்

வௌியாகியுள்ள க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, கணிதம், விஞ்ஞானம், கலைப் பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (அம் மாணவி விபத்தில் பலியாகிவிட்டார்), துவாரகா பகிரதன் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, விஞ்ஞான பிரிவில் மதுரா தனபாலசிங்கம் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பவதாரனி சிவபாலராஸா 3 ஏ சித்திகளை பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவின் ஆங்கில பிரிவில் தேவகி பிரபுராஜ் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் கலைப் பிரிவில் ஆரவி தசஅவதாரசர்மா 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

இதேவேளை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் ரங்கநாதன் ஜதுகுலன் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாமிடத்தினையும் கணித பிரிவில் செல்வதேவன் கனிசியன் 2ஏ 1பி சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

" இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முதலாமிடம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty