Princiya Dixci / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதிவியேற்று, இரண்டாண்டுகள் பூர்த்தியாவதையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், நாடளாவிய ரீதியில் 285 கைதிகள், இன்று (08) காலை, விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேவேளை, திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் தலைமையில் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஜே.ஏ.ஆர்.பி.சஞ்ஞீவ, புனர்வாழ்வு அதிகாரிகள் உட்பட சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலர் இதன்போது கலந்துகொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .