George / 2017 ஜனவரி 08 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
'என்ன நடந்தாலும் நாட்டை முன்னேற்ற முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்களை கைவிடமாட்டோம். இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் போதும், இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும், அந்தத் திட்டங்களின் பயனை பெற்றுக்கொண்ட போதுதான். அதன் பெறுமதியை உணர்ந்துள்ளனர்' என நீர்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உறுதியுடன் உள்ளனர்.
இந்த நாட்டை அபிவிருத்திச் செய்ய கைததொழில் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தான் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்னறன. இது இலகுவான விடயமல்ல. நாடு கடன் சுமையில் இருக்கும் நிலையில், எப்படி தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பது.
இலங்கையில் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. கல்வியறிவிலும் சரி, வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் என எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் அந்த மக்கள் உள்ளனர்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும். அதற்காகதான இந்த அபிவிருத்தி திட்டத்தை மொனராகலைக்கும் கொண்டு வந்தோம்.
ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை இடம்பெற்ற பொருளாதார வலைய ஆரம்ப நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் நிகழ்வு நடைபெற்ற இடத்தில் வந்து தாக்குதல் நடத்தினார்கள். இது பற்றிய பல தவறான தகவல்கள் பரவி வந்தாலும். சம்பவ இடத்தில் இருந்த எங்களுக்குதான் உண்மை தெரியும்.
நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை தடுப்பதற்கு சிலர் முயற்சித்து இவ்வாறான செயற்காபடுகளில் ஈடுபடுகின்றனர். இப்பிரதேச மக்கள் மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதாராத்தில் முன்னேற்றமடைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும் இதுவே எமது நோக்கம். அதற்குமுழுமையான ஒத்துழைப்பை நல்லாட்சிக்கு வழங்குவோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .