உலகத் தமிழர் ஆராச்சி மாநாட்டு நினைவு தினம்
10-01-2017 02:29 PM
Comments - 0       Views - 99

-எஸ்.நிதர்சன்

நான்காவது உலகத் தமிழர் ஆராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நிகழ்வு யாழ். முற்றவெளியில் (வீரசிங்கம் மண்டபம் முன்னாள்) அமைந்துள்ள நினைவுத் தூபியில் இன்று காலை நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபிகளுக்கும் அங்கு கலந்து கொண்டவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம், துரைராசா ரவிகரன், க.சிவநேசன் உட்பட கட்சிகளின் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

"உலகத் தமிழர் ஆராச்சி மாநாட்டு நினைவு தினம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty