2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் ‘சமாதானத்துக்கு எதிரானவை’

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்   

“அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் சமாதானத்துக்கு எதிராகவே உள்ளது” என, மனித உரிமை செயற்பாட்டாளரும் இனவெறி மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான சர்வதேசத்தின் தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.   
முல்லைத்தீவு - மாங்குளத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் சகவாழ்வு சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,   

“அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் சமாதானத்துக்கு எதிராகவே காணப்படுகின்றது. மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை சிதைப்பதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.   

கிராமம் போன்ற அடிமட்டத்தில் இருந்து சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்துப் பணியாற்றி, சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றச் செய்தியை, இச்செயற்றிட்டத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளோம். இந்தச் செய்தியையே அரசியல்வாதிகளுக்கு நாம் கொடுக்க வேண்டும்.   

நல்லிணக்க நிகழ்ச்சி நிரல்கள் குறித்து, அரசியல்வாதிகளே விவாதிக்கின்றனர். சமாதான நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள், கிராம மட்டத்திலுள்ள பிரஜைகளுக்கே தேவை என்றச் செய்தியை, அரசியல் தலைவர்களுக்கு கூற வேண்டும்.   

ஹம்பாந்தோட்டையில் உள்ள விவசாயிகள், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியிலுள்ள விவசாயிகள், இந்த தைப்பொங்கல் விழா ஊடாக, நீடித்த சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தையே எதிர்பார்க்கின்றனர். மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுவதை, யாரும் விரும்பவில்லை. இரண்டு நாட்டில் வாழ்வதற்கு எவருக்கும் விரும்பமில்லை. சமமான உரிமைகளையே அனைவரும் கோருகின்றனர். நாட்டின் பிரஜையாகவே, அனைத்து இடங்களுக்கும் சுதந்திரமாகச் செல்வதற்கே அவர்கள் விரும்புகின்றனர். எந்தவொரு இராணுவ மற்றும் கண்காணிப்பு பிரிவினரின் தலையீடுகள் இன்றி தமது கலாசார மற்றும் சமய விழாக்களைக் கொண்டாடவே அனைவரும் விரும்புகின்றனர்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X