2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

வட்டவான் கடற்கரை வீதி விவகாரம் நீதிமன்றம் செல்கிறது

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜ் சபேசன்

மட்டக்களப்பு, வாகரை வடக்குப்  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் கடற்கரை வீதி,  இரவோடு இரவாக அகற்றப்பட்ட விடயத்தை, நீதிமன்றின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார்.  

வட்டவான் கிராம சேவகர் பிரிவுக்கப்பட்ட கடற்கரை வீதி, சனிக்கிழமை இரவோடு இரவாக இருந்த இடமில்லாமல் அகற்றப்பட்டதுடன் அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டது. இதனை அறிந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்  கிராமசேவகர் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்ததுடன், ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டவான் கடற்கரை வீதிக்கு அருகிலுள்ள சுமார் 42 ஏக்கர் பரப்பளவுள்ள காணியில், ஜேர்மன் நாட்டு பிரஜையொருவர் சுற்றுலா விடுதி அமைத்துள்ளதுடன் போக்குவரத்தையும் தடைசெய்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X