2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கான தொழில்வாண்மைப் பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 17 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

முன்னாள் போராளிகளுக்கான தொழில்வாண்மைப் பயிற்சிப்பட்டறை திருகோணமலை, உப்புவெளியிலுள்ள முகாமைத்துவ  அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டது.

மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டிலும் புனர்வாழ்வு அமைச்சாலும் நடத்தப்படும்  இரு நாள் பயிற்சிப்பட்டறையில் முதற்கட்டமாக முன்னாள் போராளிகள் 60 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.  

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில்; முன்னாள் போராளிகள் 415 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் போராளிகள் தங்களுக்கான தொழில்களைத் தெரிவுசெய்வதற்கான வழிகாட்டல் நடவடிக்கைகள் இப்பயிற்சிப்பட்டறையில் வழங்கப்படுவதாக புனர்வாழ்வு அதிகாரசபையின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் நாகலிங்கம் புவனேந்திரன் தெரிவித்தார்.  

மேலும், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் வங்கிகளுடன்; இவர்களைத் தொடர்புபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு, தொழிலுக்கான கடன் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிராந்திய  அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினூடாக  இவர்களுக்கு நீண்டகலாக் கடன் அடிப்படையில் 250,000 ரூபாய் கடன் தொகையைப் பெறுவதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படவுள்ளது. இக்கடன் தொகைக்கான 4 சதவீத வட்டியை  இவர்களிடமிருந்து பெறுவதுடன், எஞ்சிய 8 சதவீத வட்டியைப் புனர்வாழ்வு அமைச்சு செலுத்தும் எனவும் அவர் கூறினார்.

இவர்களை சமூகமயப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்கள் என்று தாம் அழைப்போம் எனவும் அவர் கூறினார்.

இக்கடன் திட்டம்  நாளை மறுநாள் (19) கிளிநொச்சியில் 60 பேருக்கும் முல்லைத்தீவில் 61  பேருக்கும்  எதிர்வரும்; 20ஆம் திகதி  யாழ்ப்பாணத்தில் 101 பேருக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .