2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி

Gavitha   / 2017 ஜனவரி 17 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சுகாதார பராமரிப்புத்துறை விஸ்தரிக்கப்படுவதுடன், முறையான மருத்துவக் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பு என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. முறையற்ற வகையில் மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுகின்றமையானது, பொது மக்கள் மத்தியில் பெருமளவு சுகாதார ஆபத்தைத் தோற்றுவிக்கக்கூடியது என்பதுடன், சூழல்சார் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடியது.  

இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் வகையிலும், பின்தங்கிய வைத்தியசாலைகளைத் தயார்படுத்தும் வகையிலும், ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் ஸ்தாபனம் (UNOPS) மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ஆகியன ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார கழிவு முகாமைத்துவக் கட்டமைப்பு வசதிகளை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுத்திருந்தன. இந்தச் செயற்பாடு, பிராந்தியத்தில் காணப்படும் ஏனைய வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் காணப்படும் சிறந்த செயற்பாடுகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றமை, வைத்தியசாலையில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  பொதுச்சுகாதாரத்துக்கும் சூழலுக்கும் மாபெரும் ஆபத்தாக தொற்றுக்களைக் கொண்ட கழிவுகள் காணப்படுகின்றன. சகல மருத்துவக் கழிவுகளிலும் இது 20சதவீதத்தை கொண்டுள்ளது. தொற்றுள்ள கழிவுகளில் இரத்தம் படிந்த பீச்சு குழாய்கள், கையுறைகள் மற்றும் சிறுநீர் நீக்கக்குழாய்கள் போன்றன அடங்குகின்றன. இந்த முறையற்ற அகற்றல் மேலாண்மை முறையானது நோயாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பொது சுகாதார ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன், நீர், வளி மற்றும் மண் உள்ளடங்கலாக சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய கழிவுகள் முறையற்ற விதத்தில் அகற்றப்படின், ஆபத்தான நோய்களைப் பரப்பக்கூடிய காவிகள் பெருகக்கூடியக் களமாக அமையும். இலங்கையில், மருத்துவக் கழிவுகள் சிறியளவிலான எரிக்கும் முறைமை மற்றும் திறந்த வெளிகளில் கழிவுகளைக் கொட்டுவது போன்றன பொதுவான விடயங்களாக அமைந்துள்ளன.

ஆனாலும், இந்த முறைகள் மூலமாக மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் காணப்படும் ஆபத்துக்கள் பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஸ்டொக்ஹோம் மாநாடு ஆகியன அறிவுறுத்தியுள்ளன. காபஓரொட்சைட், நோய்க்கிருமிகள் மற்றும் நச்சு இராசயனங்களான டையோக்சின் போன்றன இந்தப் புகையில் காணப்படுவதுடன், சூழலுக்கும், பொது மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியன. நச்சு வாயுக்களை வெளிவிடாமல், எரியூட்டலுக்கு பதிலான மாற்று தொழில்நுட்ப முறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் முன்வைத்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .