2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சேப் ஹான்ட்ஸ் ப்ரொடக்ட்ஸ்க்கு FCCISL விருதுகள்

Gavitha   / 2017 ஜனவரி 17 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையுறைகள் உற்பத்தி நிறுவனமான, சேப் ஹான்ட்ஸ் ப்ரொடக்ட்ஸ் நிறுவனம் இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளத்தினால் (FCCISL) ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது வழங்கல் விழாவின் போது, மேல் மாகாண மட்ட வெள்ளி விருதையும் தேசிய மட்டத்திலானத் திறன் விருதையும் பெற்றுள்ளது.

அத்தோடு, 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வர்த்தகச் சபையினால் வழங்கப்பட்ட் பல்வேறு விருதுகளையும் சேப் ஹான்ட்ஸ் ப்ரொடக்ட்ஸ் நிறுவனம் வென்றுள்ளது. தரமானதும் நீண்டகாலம் உழைக்கக்கூடியதுமான கைத்தொழில் கையுறைகளை உற்பத்தி செய்யும் சேப் ஹேன்ட்ஸ் புரொடக்ட்ஸ் தனியார் நிறுவனம்,தமது உற்பத்திகளை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதோடு சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியையும் மேற்கொள்கின்றது.  

சேப் ஹான்ட்ஸ் புரொடக்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் அதிபர் ஜே.ஏ அசோக்க பெரேரா சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புப் பயிற்சியினை ஜப்பானில் பெற்றுத் தனது உடல் உபாதையை வாழ்க்கைப் பயணத்துக்கு இடையூறாக்கிக் கொள்ளாது நிறைய பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் மிகச் சிறந்த தொழில் முயற்சியாளராக மாத்திரமின்றி முன் மாதிரியான வர்த்தகராகவும் திகழ்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சியொன்றை வழங்குவதோடு, நின்று விடாமல் அரச நிறுவனங்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டால் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களிடமிருந்து பெரும் பங்களிப்பைப் பெற முடியுமென்பது அவருடைய கருத்தாக உள்ளது. “இந்த வெற்றி எமக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக உள்ளது. எம் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த எமது ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். அத்தோடு, தொடர்ந்தும் உயர் தரத்திலான உற்பத்திகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்” தனது வெற்றி குறித்து கருத்துரைத்த முகாமைத்துவப் பணிப்பாளர் ஜே.ஏ. அசோக பெரேரா தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .