2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

“பக்குருக்கு" தடை வருகிறது

Kogilavani   / 2017 ஜனவரி 19 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ. ஜோர்ஜ்

“இயந்திரப் படகுகளினால் கட்டிப் பயன்படுத்தப்படும் பக்குரு வலைகளை, இந்தியா தடை செய்த காரணத்தினால், இந்திய மீனவர்கள் இங்கு வந்து அந்த வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (18) இடம்பெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்

“இலங்கைக் கடற்பரப்பினுள் இயந்திரப் படகுகளினால் கட்டி இழுக்கப்பட்ட பக்குரு வலைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மீன்பிடிச் செயற்பாடுகளுக்குத் தடைவிதிப்பதற்குத் தேவையான விதப்புரைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக, கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கிகாரத்தினைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக அமைச்சரவை யோசனைப் பத்திரத்தை மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்திருந்தார்.

நான், மீன்பிடி அமைச்சராக இருந்த போது, இலங்கை மீனவர்களும் அந்த மீன்பிடி நடவடிக்கையில் முன்னர்  ஈடுபட்டனர். அதனை நாம் தடுத்தோம் இந்திய மீனவர்களைக் கைதுசெய்தாலும் அதில் குறைவு ஏற்படவில்லை. அதனையடுத்து 82 படகுகளையும் கைப்பற்றினோம். இப்போது இந்நடவடிக்கை குறைந்தாலும் பின்னர் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இந்த மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக தடைவிதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டு அரசாங்கமும் எமக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. இந்தியாவுடன் நல்லிணக்கம் உள்ளதால் இதனை பேசித் தீர்த்துக்கொள்வோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .