2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் ,500 ஹெக்டேயரில் இறப்பர்; செய்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறையில்; 2,500 ஹெக்டேயரில் இறப்பர்; செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக் கைத்தெமாழில் அமைச்சர் தயா கமகே,  இன்று (19) தெரிவித்தார்.

'பெருந்தோட்டச் செய்கையின் பலம் கிராமங்கள் தோறும்' எனும் திட்டத்தின் கீழான இச்செயற்றிட்டத்துக்காக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சானது 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.

இதற்குத் தேவையான இறப்பர்க் கன்றுகளை வழங்குவதற்கான நாற்றுமேடை அம்பாறை, இறவெனப் பிரதேசத்தில் 50 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.  

முதற்கட்டமாக பதியத்தலாவ, மகாஓயா ஆகிய ஆகிய பிரதேசங்களில் 70 ஹெக்டேயரில் இறப்பர்ச்; செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், 409 குடும்பங்களுக்கு 88 இலட்சம் ரூபாய் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .