2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடளாவிய ரீதியில் விஸ்தரிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 20 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மொபைல் இணைப்புத்திறனை மேலும் பலப்படுத்தும் வகையிலும், விரைவான மற்றும் இடையறாத மொபைல் இணைய சேவைகளை வழங்குவதற்கு இடமளிக்கவும், நாடெங்கிலுமுள்ள தனது வலையமைப்பின் 300 தொலைதொடர்பு கோபுரங்களில் ஒரு இடத்திலிருந்து மற்றைய இடத்துக்கான இணைப்புத்திறனை விஸ்தரித்து, அதனை மேம்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக எடிசலாட் லங்கா அறிவித்துள்ளது. 

அதிகரித்து வருகின்ற வாடிக்கையாளர்களின் தேவைகளை ஈடுசெய்யும் வகையில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான தரவுத் திட்டங்களை வழங்கி, இலங்கையில் அனைத்து பிராந்தியங்களிலும், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு இந்த மிகப் பாரிய சர்வதேச மொபைல் சேவை நிறுவனம் தயாராகி வருகின்றது.  

“எமது வலையமைப்பு மற்றும் வன்பொருள் தொடர்பில் அண்மையில் நாம் மேற்கொண்டுள்ள மேம்படுத்தல் நடவடிக்கைகள் மூலமாக எடிசலாட் வாடிக்கையாளர்கள் தற்போது விரைவான, நம்பகமான மொபைல் இணைய இணைப்புத்திறனுடன் வலுவூட்டப்பட்டு, அதன் மூலமாக, இலங்கை முழுவதும் எமது வாடிக்கையாளர்களுக்கு இடையறாத இணைப்புத்திறனை வழங்கிவருகின்றோம்,” என்று தொழில்நுட்ப ரீதியாக அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள் தொடர்பில் எடிசலாட் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுலைமான் சலிம் அல்காபி கருத்து வெளியிட்டார்.  

2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எடிசலாட் தொலைதொடர்பு கோபுர மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் பலனாகவே, விரைவான மற்றும் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய மேம்பாடுகள் சாத்தியமாகியுள்ளதுடன், நாடெங்கிலும் 3G வலையமைப்பை விஸ்தரிக்கவேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்பும் அதற்கு பெரிதும் துணைபோயுள்ளது.  

வாடிக்கையாளர்களை எட்டுதல், இணைப்புத்திறன், பெறுமானம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை முன்னெடுப்பதன் மூலமாக தனது நம்பகமான அதிவேக இணைய சேவைக்காக எடிசலாட் எப்போதும் பிரபலபமாகத் திகழ்ந்து வருகின்றது. நாட்டில் குறித்த பிராந்தியங்கள் மீதான தனது வலையமைப்பு உள்ளடக்கத்தை மேம்படுத்துவதன் மூலமாக, இலங்கை மக்கள் மத்தியில் மாற்றம் கண்டு வருகின்ற வாழ்க்கைமுறை தேவைகளை மேம்படுத்தி, தனது சேவைகள் மற்றும் அனுபவத்தை எடிசலாட் மேலும் மேம்படுத்தியுள்ளது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .