2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பசுமையான கோழி இறைச்சிக்கு ஓர் ஆய்வு

Gavitha   / 2017 ஜனவரி 24 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தையில் கோழி இறைச்சியினை கொள்வனவு செய்யும்போது, வாடிக்கையாளர்கள் எவ்வாறான விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றார்கள் என்பதனை அறிவதற்காக ஓர் ஆய்வினை களனி பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் அண்மையில் மேற்கொண்டார்கள்.  

இதன்போது, விசேடமாக நாடளாவிய ரீதியில் மக்கள் தாம் பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சி வகைகளைக் கொள்வனவு செய்யும்போது அவற்றுள் மிகவும் “புதியதாக” தூயதாக இருக்கும் கோழி இறைச்சியைக் கொள்வனவு செய்வதற்கே அதிகம் எத்தணிக்கின்றமை தெரியவந்தது. வாடிக்கையாளர்கள் எப்போதும் தாம் கொள்வனவு செய்யும் கோழி இறைச்சி, புதியதாக இருத்தலையே விரும்புகின்றனர். எனினும் முன்னைய காலங்களில் வெளிநாடுகிளிலிருந்து இறக்குமதி செய்பவையே புதிய, தூய்மையானது என எண்ணினர்.

ஏனெனில், அந்நாடுகளின் தூய்மைத் தன்மை மற்றும் சுகாதார முறைமைகளிலுள்ள நம்பகத்தன்மையே இதற்குக் காரணமாக இருந்து வந்தது.  

உண்மையிலேயே இவ் ஆய்வானது, “புதியதென்றால், அது மலைநாட்டிலிருந்து தான்” எனும் தொனிப்பொருளில் தமது சந்தைப்படுத்தலை மேற்கொள்ளும் க்ரிஸ்ப்ரோ போன்ற இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும். ஏனெனில், அவர்கள் முற்றிலும் தூய்மை மற்றும் “புதியதாக” இருத்தலை முதன்மையாகக்கொண்டே தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஒன்றிணைக்கப்பட்ட முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், க்ரிஸ்ப்ரோ கோழி இறைச்சி உற்பத்தியானது, ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான, நேர்த்தியான கண்காணிப்பின் கீழ் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது, கோழிகளுக்குரிய உணவு உற்பத்திக்குத் தேவையான தானிய வகைகளைத் தெரிவு செய்வதிலிருந்து தாய்க்கோழிகளைப் பராமரித்தல், ப்ரொய்லர் கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்தல், வளர்த்தல், இறைச்சியாக்கல் மற்றும் பொதியிடல் உட்பட குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளில் சுப்பர் மார்க்கட்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விநியோகித்தல் வரைக்கும் உயர் தரமான நேர்த்தியான மிகவும் உயரிய சுகாதார முறைமைகளைக் கையாள்தல் இங்கு துள்ளியமாகக் கவனிக்கப்படும் ஒரு விடயமாகும். க்ரிஸ்ப்ரோ எப்போதும் தூய்மை மற்றும் புதியதாக இருப்பதை முதன்மையான காரணியாகக்கொண்டு செயற்படும் நிறுவனமாகும்.  

இறக்குமதி செய்யப்படும் கோழி இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில், க்ரிஸ்ப்ரோ தமது உற்பத்தி புதியதாக, தூயதாக தமது வாடிக்கையாளர்களது கரங்களை அடைவதற்கான சகல செயற்பாடுகளையும் நேர்த்தியாக மேற்கொள்கின்றது.

க்ரிஸ்ப்ரோ முகாமைத்துவமானது “தூய்மை கடவுளுக்கு அடுத்த படியாக முக்கியமானது” என்பதனை நம்பக்கூடியவர்களாவர். கோழிகளுக்குரிய உணவு உற்பத்திக்காக தமது விவசாய நிலங்களிலிருந்து அறுவடை செய்து பெற்றுக்கொள்ளப்படும் தானியங்கள், அரிசி, சோயா மற்றும் ஏனைய தானிய வகைகள் அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதற்குரிய சகல செயற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய முறையில் சூடாக்கி நுண்ணுயிர்கள் கிருமிகளை முற்றாக அழித்ததன் பின்னர் உணவு உற்பத்திகளை மேற்கொண்டு கோழிகளுக்கு வழங்கப்படுகின்றமை தூய்மையை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த சான்றாகும்.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .